தீவிரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க ஆசிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்!

தீவிரவாதிகள் எனும்போது அவர்கள் எல்லோரும் ஒரே விதமானவர்களே. அவர்களது மனப்போக்கும் ஒரே விதமானவை. ஆசிய நாடுகள் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும்போது இறைமையைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

mahintha

ஆசிய அரசியல் கட்சிகளின் எட்டாவது சர்வதேச மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு, கொழும்பு நெலும் பொக்குன மஹிந்த ராஜபக்‌ஷ கலையகத்தில் இன்று இடம்பெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாடொன்று தீவிரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, அந்நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் முரண்பாடுகளை மறந்து ஒருமித்துச் செயற்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இங்கு உரையாற்றினார்.

மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் உட்பட்ட முக்கிய வெளிநாட்டுப் பிரமுகர்களும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் 33 நாடுகளைச் சேர்ந்து 250 தலைவர்கள் பங்குகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts