தீவிரமடையும் போர்க்களம்! 9000 உயிர்களை பறிகொடுத்த மக்கள்!!

ஹமாஸ்-இஸ்ரேளுக்கு இடையிலான போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய பாலஸ்தீனத்தின்-காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், இதுவரை 7, 703 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ்-இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 1,403 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் நடந்த மோதலில் மேலும் 109 பேர் கொல்லப்பட்டனர்.

இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் இடையிலான போரில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,217 ஆக உயர்ந்துள்ளது.

ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிக்கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் 23வது நாளாக தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts