தீவிரமடைந்துவரும் ரஷ்ய தாக்குதல்: வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துள்ள ஜெலென்ஸ்கி

ரஷ்ய தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி( Volodymyr Zelenskyy) தமது வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் மீதான தாக்குதலை சமீப நாட்களாக ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கார்கிவ்(Kharkiv) பிராந்தியத்தில் மேலும் இரண்டு குடியிருப்பு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

அத்துடன் Zaporizhzhia பிராந்தியத்தில் ஒரு குடியிருப்பு பகுதியையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் பயணங்களை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இரண்டு முக்கிய விமான நிலையங்களை ரஷ்யா மூடியுள்ளது.

உக்ரைனியப் படைகள் சமீபத்திய வாரங்களில் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts