தீவகத் தளங்களைப் பலப்படுத்தும் முயற்சியில் கடற்படையும் இராணுவமும்

யாழ். வேலணை மண்கும்பான் கடற்கரையோரத்தில் பாரியதளம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற கடற்படையினர் தீவக் பகுதிகளிலுள்ள தளங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

வேலணை மண்கும்பான் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கடற்படைத்தளமானது தற்போது மேலும் பலப்படுத்தப்படுகின்றது.

இதற்காக சீமெந்தினால் அமைக்கப்பட்ட புதிய கட்டிடங்களை கடற்படையினர் கடந்த சில மாதங்களாக அமைத்து வருகின்றனர். அத்தோடு குறித்த தளத்தின் உள்ளே கருங்கற்களால் ஆன பாதைகளையும் கடற்படையினர் அமைத்து அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது தவிர யாழ்-ஊர்காவற்றுறை வரையான பண்ணை வீதியிலுள்ள சிறிய கடற்படையின் முகாம்களும் பலப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பண்ணை வீதியில் மண்டைதீவு சந்தியில் அமைந்திருந்த தளமும் நிரந்தரமாக நிர்மாணிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

மேலும் வேலணை வெட்டுக்குளம் பகுதியில் இராணுவத்தினர் பாரியதளமொன்றை அமைத்து வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts