தீவகத்தின் அபிவிருத்திக்கு 300 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

வேலணை, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கு தலா 100 கோடி ரூபா வீதம் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தீவுப்பகுதியில் உள்ள மூன்று பிரதேச சபைகளினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கென 300 கோடி ரூபா நிதியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளது.

வேலணை, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கு தலா 100 கோடி ரூபா வீதம் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபை யின் உறுப்பினர் சி. ந.கருணாகரகுருமூர்த்தி தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு “கம நெகும’ திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி மூலம் மேற் கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த மதிப்பீட்டுப் பணிகளை பிரதேச சபைகள் ஆரம்பித்துள்ளன.

Related Posts