தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தை தொடர்வோம்’ காணாமல் போனோரின் உறவினர்கள்

தமிழர் தாயத்தில் ராணுவத்திடம் கையளிக்கப்பட்டும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தி உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் சற்றுமுன் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் உரிய முறையில் செயற்பட்டு, ஐ.நா. மனித உரிமை பேரவையினால் உரிய தீர்வு கிடைக்கும்வரை இப்போராட்டத்தை இரவு பகலாக தொடரவுள்ளதாக உறவுகளை தொலைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

ஐ.நா.வின் கவனத்தை ஈர்க்க காணாமல் போனோர் தொடர் போராட்டம்

Related Posts