தீர்வுத் திட்ட முன்வரைபு ‍தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் அமர்வு கொழும்பில்

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பிலுள்ள தமிழ் மக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களில் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங்களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ள தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் செயற்பாடு எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள தமிழ்ச் சங்கம் மண்டபத்தில் நடைபெறும் என அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரையும் வருகை தந்து தமது கருத்துக்களை முன்வைக்குமாறு தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, மிக விரைவில் தீர்வுத்திட்ட முன்மொழிவு முழுமையாகத் தயாரிக்கின்ற பணி ஆரம்பிக்கப்படவுள்ளதால், எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் politicalsub@tamilpeoplescouncil.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது +94 75 6993211என்ற இலக்கத் தொலைபேசி ஊடாகவோ அனுப்பிவைக்குமாறு தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Posts