தீர்வின்றி 14 ஆவது நாளை எட்டியது கேப்பாபிலவு மக்களின் போராட்டம்

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 14 ஆவது நாளை எட்டியுள்ளது.

பிலவுக்குடியிருப்பில் விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளில் தம்மை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 30 ஆம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவித்து, கிராமசேவகர், அழைத்தபோதும் அதிகாரிகள் எவரும் வருகைதராத நிலையில், மக்கள் அதிகாரிகள் தம்மை ஏமாற்றுவதாக தெரிவித்து, தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கபோவதாக தெரிவித்த நிலையில் கடந்த 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

எனினும் தீர்வின்றிய நிலையில் இன்று பதினான்காவது நாளாக தொடர்கின்றது.

Related Posts