தீபாவளிக்கு தனுஷ் நடித்துள்ள அனேகன் படமும், அவர் தயாரித்துள்ள டாணா படமும் ரிலீஸ் ஆகிறது.
இந்த தீபாவளி நட்சத்திர தீபாவளி என்றே கூற வேண்டும். தீபாவளிக்கு விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகின்றன.
மேலும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யாவை வைத்து எடுத்துள்ள டாணா படமும் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். டாணாவில் தனுஷ் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.
இந்நிலையில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், புதுமுகம் அமிரா தஸ்துர் நடித்துள்ள அனேகன் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. தனுஷ் தானே தயாரித்து நடித்த வேலை இல்லா பட்டதாரி வெற்றி பெற்ற பிறகு அவர் நடிப்பில் அனேகன் ரிலீஸாக உள்ளது.
ஆக தீபாவளி ரேஸில் தனுஷ் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் களத்தில் உள்ளார்.