தீபாவளி கொண்டாட்டத்தை இந்துக்கள் புறக்கணிப்பர்! – இந்து மாமன்றம் எச்சரிக்கை!!

தமிழ் அரசியல் கைதிகளை தீபாவளிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தின் தீபாவளி தொடர்பான நிகழ்வுகளில் சுயகௌரவமுடைய எந்தவொரு இந்து மகனும் கலந்து கொள்ளமாட்டான் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் எச்சரித்துள்ளது.

இது குறித்து இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன், பொதுச் செ லாளர் பொ.கதிர்காமநாதன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த நாட்டில் 14 சிறைச்சாலைகளில் 217 தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டு களாக சிறை வைக்கப்பட்டுள்ளமை நீதிக் கும் நியாயத்திற்கும் முரணாகத் தொடர்வதை அந்தக் கைதிகளின் உறவினர்கள் பலர் மீண்டும் மாமன்றத்தின் கவனத்திற் கும் கொண்டு வந்துள்ளனர். தீபாவளிக்குமுன் இவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என ஜனாதிபதிக் கும் அரசாங்கத்திற்கும் மாமன்றம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

உண்ணாவிரதம் இருந்த அக்கைதிகளுக்கு அவர்களின் பிரச்சினைக்கு 07.11.2015க்கு முன் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி தந்த உறுதி மொழியைத் தொடர்ந்து அந்த உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது. அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாவிட்டால் அக்கைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க நேரிடும். இந்த அரசியல் கைதிகளின் பிரச்சினை 07.11.2015க்கு முன் வாக்களித்தபடி தீர்க்கப்பட வேண்டும்.

அவர்கள் தீபாவளிக்கு முன் தங்கள் குடும்பங்களுடன் இணைய வழிவகுக்க வேண்டும் என இந்நாட்டு இந்து மக்களின் சார்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர் உட்பட சகல அரசியல் தலைவர்களுக்கும் பகிரங்க வேண்டுகோள் விடுக்கிறோம். இதை மனிதாபிமான முறையில் நல்லாட்சியின் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் தாமதமின்றி தீர்மானிக்க வேண்டும்.

இந்த அரசியல் கைதிகளுக்கு உடன் விமோசனம் கிட்ட இறையருள் வேண்டி சகல இந்து மக்களும் நாளை வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் இத ற்கு சகல இந்து ஆலய தர்மகர்த்தாக்களும், மாமன்றத்தின் அங்கத்துவ சங்கங்களும் வழிவகுக்க வேண்டும் எனவும் வினயமாக மாமன்றம் வேண்டுகோள் விடுக்கின்றது. அதேபோல் வெள்ளியன்று மதியம் 12.30 மணிக்கு அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமையகத்திலும் விசேட வழிபாடு, பூஜை என்பன நடைபெறும்.

இந்த கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட உறுதி மொழி மீறப்பட்டு அவர்கள் உண்ணாவிரதத்தை மீண்டும் ஆரம்பித்தால் இந்த நாட்டு இந்து மக்களும் அவர்களு க்கு ஆதரவு தந்து உண்ணாவிரதத்தில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம் என்றும் 10.11.2015 அன்று இந்த நாட்டு இந்து மக்கள் தீபாவளியைக் கொண்டாடும் நிலையில் இருக்க மாட்டார்கள் எனவும் தெரிவிப்பதுடன் எமது சகோதர சகோதரிகள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்க விட்டுவிட்டு அரசாங்கமோ அரசாங்கத்தைச்சேர்ந்த எவருமோ தீபாவளியை கொண்டாட எந்த நடவடிக்கையும் எடுப்பதை யிட்டு இந்நாட்டு இந்து மக்கள் எந்தவித திருப்தியும் அடையமாட்டார்கள்.

மாறாக இன்னும் வேதனையடைவர் என்பதையும் அரசு எந்தவித கொண்டாட்டமோ களியா ட்ட நிகழ்வோ ஏற்பாடு செய்தால் சுய கௌரவமுடைய எந்த இந்து மகனும் கலந்து கொள்ளமாட்டான். என்பதையும் இந்துமக்கள் சார்பில் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

Related Posts