தீக்காயங்களுக்கு இலக்கான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அராலி வீதியைச் சேர்ந்த சிவனொளி காண்டீபன் (வயது 17) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 4ஆம் திகதி தீயில் எரியுண்ட இவர், 12 நாட்களாக யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.