தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் மாவை சேனாதிராஜா!!!

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று சந்தித்தார்.

இதுபற்றி, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

கருணாநிதி மறைவுக்கு பின், தி.மு.க., தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன்பின், இலங்கையில் உள்ள, தமிழர் தலைவர்கள் யாரும், ஸ்டாலினை சந்தித்து பேசவில்லை. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளதால், ஸ்டாலினை, சேனாதிராஜா சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதற்கு, ஸ்டாலின் நன்றி கூறினார்.

இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு குறித்தும், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், இருவரும் விவாதித்தனர். அப்போது, ‘கருணாநிதி உயிருடன் இருந்த போது, இலங்கை தமிழர்கள் பிரச்னையை எப்படி அணுகினாரோ, அதேபோல அணுகி, அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண, தி.மு.க. பாடுபடும்’ என, சேனாதி ராஜாவிடம், ஸ்டாலின் உறுதியளித்தார். இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

Related Posts