தி.மு.க தலைவர் கருணாநிதி சாதனை வெற்றி!!

திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி மகத்தான வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து 13-வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டப் பேரவைக்கு தேர்வாகியுள்ளார் கருணாநிதி.

அதிமுக வேட்பாளரை விட 68,366 வாக்குகள் அதிகம் பெற்று கருணாநிதி மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். இதுவரை போட்டியிட்ட தேர்தல்களிலேயே இந்த தேர்தலில் தான் கருணாநிதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் அகிலஇந்திய அளவில் 13 முறை சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சாதனையை கருணாநிதி படைத்துள்ளார்.

மேலும் திருவாரூர் தொகுதியில் இருந்து தற்போது கருணாநிதி இரண்டாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Related Posts