திஸர பெரேரா சாதனை; இந்திய அணி வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20க்கு இருபது போட்டியில் இந்திய அணி 69 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பாக ஷீகர் தவான் 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக திஸர பெரேரா தொடர்ச்சியாக மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றி ஹெட்-ரிக் சாதனை படைத்தார்.

20க்கு 20 வது மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் இரண்டிலும் ஹெட்ரிக் பெற்ற வீரர்களில் திஸர பெரேரா இரண்டாவது நபராக பதிவாகியுள்ளார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 09 விக்கட் இழப்பிற்கு 127 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை சார்பாக சாமர கப்புபெதர 32 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

Related Posts