இலங்கை அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் திலகரட்ன தில்ஷானை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கொன்றிற்கு தில்ஷான் முன்னிலையாகாத காரணத்தால் கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டாரவால் இந்த உத்தரவு வௌியிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதி நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் , பிணையாளியும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தில்ஷானுக்கு பிடியாணை பிறப்பித்த நீதவான் , பிணையாளிக்கு அழைப்பாணை பிறப்பித்த நிலையில் , வழக்கு எதிர்வரும் மே மாதம் 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.