இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலிய அணி 04 விக்கட்டுக்களால் இந்தப் போட்டியில் வெற்றியீட்டியது.
நேற்றய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக தனஞ்சய டி சில்வா 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து 129 என்ற வெற்றி இலக்கை நோக்கி அவுஸ்திரேலிய அணி ஆட்டத்தை ஆரம்பித்திருந்தது.
அந்த அணி சார்பாக மெக்ஸ்வெல் 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இறுதியாக 130 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட அவுஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் வெற்றி மூலம் அவுஸ்திரேலிய அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இதேவேளை இந்தப் போட்டி இலங்கை அணி வீரர் டீ.எம் தில்ஷான் விளையாடிய இறுதிப் போட்டி என்பதும் இங்கு கூறத்தக்கது.
அதன்படி தனது இறுதிப் போட்டியில் டீ.எம்.தில்ஷான் துடுப்பெடுத்தாடி 1 ஒட்டத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டதோடு பந்து வீச்சில் 08 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராகவும் தொடடரின் சிறப்பாட்டக்காரராகவும் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.