‘திறமைக்கு தொழில்’ தொழிற்சந்தை கொழும்பு மாவட்டச் செயலகத்தில்

‘திறமைக்கு தொழில்’ தொழிற்சந்தை இம்மாதம் 20ஆம் திகதி காலை கொழும்பு மாவட்ட செயலகத்தின் முதலாவது மாடியில் அமைந்துள்ள பிரதான கேட்போர்கூடத்தில நடைபெறவுள்ளது.

கைத்தொழில் தொடர்பு அமைச்சின் ஆளணி மற்றும் தொழில்வாய்ப்பு திணைக்களத்தின் கீழ் கொழும்பு மாவட்டச் செயலகத்தின் மக்கள் சேவை மத்தியநிலையம் இத்தொழில் சந்தையை ஏற்பாடு செய்துள்ளது.

அன்றைய தினம் தொழில்சந்தையில் பங்குபற்றவிருப்போருக்காக பிரபல பேச்சாளர் அஜித் ஜயவர்தனவினால் பணித்துறை தொடர்பான உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இச்சந்தையில் நாட்டிலுள்ள பிரபல தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன் தகைமைகளுக்கேற்ப தொழில்வாய்ப்புக்களை பெற வாய்ப்பளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts