திரையுலகில் 10 வருடங்கள்: காஜல் அகர்வால் நெகிழ்ச்சி!

2007-ல் லட்சுமி கல்யாணம் என்கிற தெலுங்குப் படம் மூலமாக திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இன்றுடன் காஜல் அகர்வால் திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து ட்விட்டரில் அவர் கூறியதாவது: என்னுடைய தடைக்கற்களுக்கு நன்றி. அவற்றை நான் எதிர்கொண்டிருக்காவிட்டால் என் பலத்தை அறிந்திருக்கமுடியாது என்று கூறியுள்ளார்.

காஜல் அகர்வால் தற்போது விவேகம், விஜய் – அட்லி படம் என இரு முக்கிய தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறார்.

Related Posts