திரையுலகிற்கு இருள் சூழ்ந்த நாள் இன்று!

இந்திய திரையுலகின் சரித்திரப் பக்கங்கள் எமனின் கையால் கிழித்து எறியப்பட்ட நாள். ஆம் நடிப்பு என்ற வார்த்தையை முதன் முதலாக தமிழ் சினிமாவிற்கு காட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இன்று உலக நாயகன், சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் அனைத்து நடிகர்களும் நடிப்பில் இவரின் பாணியை தான் இன்றும் கடை பிடித்து வருகின்றனர்.

sivaji_ganesan

ஒரு நடிகன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால், அவன் முதலில் பேசி காட்டும் வசனம் இவர் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் வசனமாகத்தான் இருக்கும்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இல்லாத போதும் ஆயிரம் பொன் என்பது போல் இருக்கும் போது திரையுலக ராஜாவாக திகழ்ந்த இவர், இறந்த பிறகு இவர் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை டிஜிட்டல் முறையில் வெளியிட்ட போது 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. மக்கள் மனதில் இவர் என்றும் அழிவதில்லை என்பதற்கு இது சிறிய எடுத்துக்காட்டு தான்.

இப்படியொரு மகான் நம்மை விட்டு பிரிந்தாலும், அவரின் திரைப்படங்கள் வாயிலாக இன்றும் நம் கூடவே, அவர் பயணித்துக்கொண்டே தான் இருப்பார்.

Related Posts