கிருத்திகன் ஜனனி நடிப்பில் கானா வரோ இயக்கத்தில் உருவான இலவு குறும்படம் அண்மையில் கொழும்பு ஈரோஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது.
படத்தை காண வந்த பெருமளவான மக்களோடு அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், அறிஞர்கள் என பலரும் வருகைதந்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட இலவு குறும்படத்தில் நடிகர் கிருத்திகன் நடிகை ஜனனி மற்றும் பலருடன் ஒளிப்பதிவாளராக நிரோஷ் இசை தர்சனன் படத்தொகுப்பு மாதவன் என பல கலைஞர்கள் பணியாற்றியிருந்தனர்.
கானா வரோவின் இலவு குறும்படம் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டதோடு பிரான்சிலும் திரையிடப்பட்டது தொடர்ந்து கொழும்பு, லண்டன், கனடா, நோர்வே ஹட்டன், மட்டக்களப்பு, திருகோணமலை என பல பகுதிகளிலும் திரையிடப்பட்டு வருகின்றது.
விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ள நமது பிரதேச சினிமா இலவு குறும்படம் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட சினிமாகளில் குறிப்பிடத்தக்க படைப்பாகும்.
யாழ்ப்பாண குடும்பங்களி்ல் ஏற்படும் ஓர் விபரீத ஆசை, திருமணம் பற்றி பெண்களின் முடிவெடுக்கும் தன்மை, தந்தை மகள் உறவு பற்றிய கதைக்களத்தை கொண்ட இலவு குறும்படம் டிவிடி வடிவத்திலும் விற்பனையாகின்றது.
நமது பிரதேசத்தில் திரைத்துறை சார்ந்து சினிமா படைப்புகளை தயாரித்து உலகம்முழுவதும் பாராட்டுகளை பெற்ற கிருத்திகன், வரோதயன் போன்ற இளைஞர்களுக்கு எமது மக்களின் பேராதரவை வழங்குவோம்
நடிகர் கிருத்திகன் பேட்டி
இலவு பற்றி பிரபலங்களின் வாழ்த்துக்கள்.
இலவு டப்பிங்.