திரு இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

விஷாலை வைத்து ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் திரு. இவர் மீண்டும் விஷாலை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அவர் விக்ரமை வைத்து படம் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

thiru-vikaram

‘10 எண்றதுக்குள்ள’ படத்திற்குப் பிறகு விக்ரம் சிறந்த கதையை தேடிவந்த நிலையில், திருவின் கதை பிடித்துப் போக உடனே நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விக்ரம் ஒரே நேரத்தில் ஆனந்த் சங்கர் இயக்கத்திலும் திரு இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.

விக்ரம்-திரு இணையும் புதிய படத்தை எஸ்.எஸ்.எப் பட நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்நிறுவனம் ஏற்கனவே ஜீவா நடிப்பில் வெளியான ‘சிங்கம் புலி’ படத்தை தயாரித்துள்ளது.

Related Posts