திருவாசகம் சிங்களத்தில்! நல்லூரில் வெளியீடு!

சைவசமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகத்தின்சிங்கள மொழிபெயர்ப்பு நூல் எதிர்வரும்-20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

thiruvasakam-singalam

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவையொட்டிநடைபெறும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வை முன்னிட்டுமேற்படி நூல் வெளியிடப்படவுள்ளது.

ஏழு நூல்களைத் தமிழிலிருந்து சிங்களத்துக்கு மொழி பெயர்த்த பொறியியலாளரும்,சமூக சேவகருமான வேலுப்பிள்ளை சண்முகநாதன், ஆறு நூல்களைத் தமிழிலிருந்துமொழிபெயர்த்த ஆசிரியர் இராசையா வடிவேல் மற்றும் சிங்கள மொழிபெயர்ப்பாளர்சுப்பிரமணியம் உமாச்சந்திரன் ஆகியோர் திருவாசகத்தைத் தமிழிலிருந்துசிங்களத்துக்கு மொழி பெயர்த்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts