திருவள்ளுவர் சிலைகளை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடு

இந்திய-இலங்கை நட்புறவை மேம்படுத்தும் வகையில், சென்னையிலிருந்து திருவள்ளுவரின் 16 சிலைகள் இலங்கைக்கு விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய, இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

thiruvalluvar

சென்னை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் இலங்கையில் நிறுவப்பட உள்ள இந்த சிலைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை(19) நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன் இந்த சிலைகள் விரைவில் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களான சாவகச்சேரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், புளியங்குளம், திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, மாத்தளை, கல்முனை, கம்பஹா, நாவலபிட்டி, தெரணியகல், ஹட்டன், பண்டாரவளை, இறக்குவானை ஆகிய 16 இடங்களில் அமைந்துள்ள 13 பாடசாலைகளிலும், 3 கல்லூரிகளிலும் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்பட உள்ளன.

Related Posts