திருமண வாழ்க்கை, ஷாருக்கானுடன் நடனம் குறித்து மனம் திறந்த சன்னி லியோன்

கனடாவில் ஆபாச படங்களில் நடித்த வந்த் சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது. சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தொடர்ந்து இந்தியில் பல படங்கள் நடித்து வருகிறார். அர்பாஸ் கான் நடிக்கும் ‘தேரா இன்டிசார்’, லோலோ, ஷாருக்கானின் ‘ரயீஸ்’ படத்தில் ஒரு பாடல் என அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

sunny

சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘பயர் அண்டு ஐஸ்’ நிகழ்ச்சியில் பாடகி நேஹா கக்கார் உடன் சேர்ந்து நடிகை சன்னி லியோன் பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

இதனிடையே, சன்னி லியோனிடம் நடத்திய உரையாடலில், தனது அனுபவம் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை சன்னி பகிர்ந்துக் கொண்டார்.

தமிழ் படங்கள் குறித்து சன்னி லியோன் கூறுகையில், எனக்கு தென்னிந்தியா மிகவும் பிடிக்கும். ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடித்தது நல்ல அனுபவம். தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் உண்டு. ஆனால் எனது தமிழ் எல்லோருக்கும் சிரிப்பு வரவைக்கும். தமிழ் கற்பது கடினம்.

இதுவரை நான் நடித்த படங்களுக்கு கவர்ச்சியான கதாப்பாத்திரம் தேவைப்பட்டது. மற்ற கதாப்பாத்திரங்களிலும் என்னால் நடிக்க முடியும். எனக்கு விருப்பமானவற்றை செய்கிறேன். அதேநேரம் மற்றவர்களின் கருத்தையும் மதிக்கிறேன். எனது பலமே ரசிகர்கள் தான். உண்மையில், அவர்களது கருத்தை தான் நான் முக்கியமனதாக கருதுகிறேன்.

சிறுவயதில் மிகவும் சந்தோஷமாக வளர்ந்தேன். நான் ஒரு பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவள். எனது குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து படங்கள் பார்த்து மகிழ்வோம். நான் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதற்கு காரணம் எனது கணவர். எப்போதும் என்னை ஊக்குவிப்பார்.

பாலிவுட்டில் எனக்கு கஷ்டங்கள் வரும் பட்சத்தில் நிறைய நடிகர்கள் ஆதரவு அளிக்கின்றனர். நான் ஒரு ஆன்மிகவாதி, ஆனால் மதவாதியல்ல என கூறினார்.

ஷாருகான் படத்தில் நடிப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு சூப்பர் ஹீரோவுடன் நடனமாட துடித்து கொண்டு இருந்தேன். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஷாருக்கான் படத்தில் ஒரு பாடலுக்கு அழைப்பு வந்த போது அவர்கள் சரியான நம்பருக்கு தான் அழைப்பு விடுத்துள்ளார்களா என எண்ணினேன். எனக்கு சரியான ஆடைகள் கொடுக்கபட்டு ரிகர்சல் பார்க்கப்பட்டது. எனக்கு நடன அசைவுகள் கற்று கொடுக்கப்பட்டது. இனி என்னை மாற்ற என்னை நானே தேற்றி கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts