திருமணம் என்பது பெரும் பணச்செலவில் ஆடம்பரமாக இடம்பெறுவது மாத்திரமே என்பதற்கு அப்பால் நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதை வவுனியாவில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தம்பதியினர் செய்து காட்டியுள்ளனர்.
வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மதிசூதனன் இரமீலா ஆகியோரின் திருமணத்தின்போதே இந் நிகழ்வு இடம்பெற்றது.
திருமணங்களை பெரும் பண செலவுடன் நடத்தும் இக்காலத்தில் புதுவிதமாக நற்காரியத்தை செய்து கொள்ளும் பொருட்டு மணமகனின் தந்தையான முன்னாள் கிராம சேவகரான முத்துராசாவினால் வவுனியா பிரதேச செயலகத்துடன் தொடர்புகொண்டு நலிவுற்ற குடும்பத்திற்கு இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியாவில் முதற்தடவையாக இடம்பெற்ற இந் நிகழ்வை திருமணத்தில் கலந்துகொண்ட பலரும் பாராட்டியிருந்தனர்.