Ad Widget

திருமணமாகாத ஜோடிகள் மோட்டார் பைக்கில் பயணம் செய்ய தடை

திருமணமாகாத ஜோடிகள் இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக பயணம் செய்வதற்கு தடைவிதிப்பதற்கு ,இந்தோனேசியாவின் அச்சே மாகணத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் அரசியல்வாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

bike-girl-boy

வடக்கு அச்சே பகுதியில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த புதிய சட்டம், உள்ளூர் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.

இந்த சட்டம் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வருகிறது. இந்தோனேசியாவில் உள்ள அச்சே மாகணம் ஒன்று தான் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் விளக்கத்தை கடுமையான வகையில் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை போட்டபடி பயணிக்கூடாது என்றும் இரண்டு கால்களையும் ஒரே பக்கமாக வைத்தபடி பின் இருக்கையில் அமர்ந்து செல்ல வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அந்த சட்டம் பரவலாக நடைமுறையில் இல்லை என்றும் தெரியவருகின்றது

Related Posts