திருநெல்வேலி வைத்தியசாலையில் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்புக்கு

யாழ். திருநெல்வேலியிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கண் புரை நீக்கி சத்திரசிகிச்சை மேற்கொண்டபோது, கண்ணில் கிருமித் தொற்று ஏற்பட்டமையால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேரில், ஐந்து பேரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தனியார் வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை கண்புரை நீக்கி சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்கள் ஒன்பது பேர், கிருமித் தொற்று ஏற்பட்டமையால் பாதிக்கப்பட்ட நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஐந்து பேருக்கு மேலதிக சிகிச்சை வழங்குவதற்காக, கொழும்புக்கு மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை யாழ். போதனா வைத்தியசாலை மேற்கொண்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts