திருநெல்வேலி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல்வரை மூடல்!!

திருநெல்வேலி போதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

நல்லூர் திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 24 பேருக்கு தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மரக்கறி வியாபாரிகள் மற்றும் சந்தைத் தொகுதியில் உள்ள கடைகளின் வியாபாரிகளும் அடங்குகின்றனர்.

அதனால் திருநெல்வேலி பொதுச் சந்தை உள்ளிட்ட சந்தைத் தொகுதி முழுமையாக நேற்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது.

திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் மற்றும் அங்கு பணியாற்றுபவர்கள் தம்மை சுயதனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

தமது விவரங்களை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியிடம் அல்லது வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த ஒத்துழைப்பை வழங்குவதன் ஊடாக தமது உறவினர்களையும் பிரதேசத்தையும் கோரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாக்க முடியும்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.

Related Posts