திருநெல்வேலி அருள்மிகு தலங்காவற் பிள்ளையார் கோவில் பரிசளிப்பு விழா

திருநெல்வேலி அருள்மிகு தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சமய அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா தீர்த்தத் திருவிழாவின்போது நடைபெற்றது.

விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேகன் தலைமையில் நடைபெற்ற இப்பரிசளிப்பு நிகழ்ச்சியில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் உப அதிபர் ச.லலீசன், யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் தி.வேல்நம்பி, ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிஷன் வித்தியாலய அதிபர் யோ.ஜெகஆனந்தம் ஆகியோரும் விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கிவைத்தனர்.

சிறப்புப் பரிசாக செல்வன் டிசாந்தன் யசோதரன் என்பவருக்குத் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.

01

02

03

04

05

06

07

Related Posts