அமைச்சர் ஒருவரைக் கொலை செய்யத்திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட யாழ்ப்பாணம் சேர்ந்த பெண்ணொருவருக்கு கேகாலை நீதிமன்றம் 20 வருட சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.திருநெல்வேலி பிரதேசத்தைச் சேர்ந்த ராசலிங்கம் தாமரைவதனி என்ற பெண்ணுக்கே கிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது
குறித்த பெண், கடந்த 2007ம் ஆண்டு நவம்பவம் 21ம் திகதி தொடக்கம் 2008 பெப்ரவரி 6ம் திகதி வரை கேகாலை ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை படுகொலை செய்ய திட்டமிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பிரதேசத்தைச் சேர்ந்த ராசலிங்கம் தாமரைவதனி என்ற பெண்ணுக்கே கேகாலை மேல் நீதிமன்றம் 20 வருட சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் தொடர்பாக குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை நடாத்தி வந்தனர்.
விசாரணை அறிக்கை கேகாலை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.