திருநெல்வேலியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

தமிழ்நாடு – திருநெல்வேலி அருகே நேற்று (22) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

அம்புலன்ஸ் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கங்கைகொண்டான் கலைஞர் காலனியைச் சேர்ந்த இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் தியாகராஜன் (42வயது), சசிகுமார் (38 வயது) ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

திருநெல்வேலிக்குச் சென்று அதிகாலை 4 மணியளவில் கங்கைகொண்டானுக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தை அடுத்து தாழையூத்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து அம்புலன்ஸ் ஓட்டுநரான திருமங்கலம் அருகேயுள்ள ஓடைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts