யாழ். திருநெல்வேலிப் பகுதியிலுள்ள மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாதவர்களின் வாள் வீச்சிற்கு உள்ளாகி இருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று இரவு சுமார் 7 மணியளவில் யாழ்.திருநெல்வேலிப் பகுதியின் இராமசாமிப் பரியாரியார் சந்தியடியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று மோட்டார் சைக்கிள்களில் கறுப்பு துணியால் முகத்தை மூடிக்கொண்டு வந்துள்ளனர்.
இவர்கள் வீதியால் நடந்து சென்ற ஒருவரது கையை வெட்டியதோடு சந்தியில் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினதும் சாரதி மற்றும் அவரது முச்சக்கர வண்டி மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவங்கள் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காக பாதிக்கப்பட்டவர்கள் சென்றபோதும் பொலிஸார் உடனடியாக முறைப்பாடுகளை ஏற்கவில்லையென்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை திருநெல்வேலிப் பகுதியில் தொடர்ச்சியாக வாள் வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.