Ad Widget

திருத்தங்களுடன் நிதி நியதிச்சட்டம் ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிவைப்பு

வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம் தொடர்பான திருத்தங்கள் செய்யப்பட்ட கடிதம் புதன்கிழமை(10) மாலை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வடமாகாண அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

CVK-Sivaganam

வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் புதன்கிழமை (10) நடைபெற்றபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஆளுநரால் திருத்தங்கள் செய்யுமாறு கூறப்பட்ட நிதிநியதிச்சட்டம் வடமாகாண சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விவாதத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா கூறிய பரிந்துரைகளும் உள்வாங்கப்பட்டு கடந்த 5ஆம் திகதி 5பக்கங்கள் கொண்ட கடிதங்களாக ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இருந்தும், அதனை ஆளுநர் ஏற்றுக்கொள்ளாததுடன், சில சொல்லாடல்களை அதில் இணைத்து அனுப்பியுள்ளார்.

அந்த சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் சட்டச்சிக்கல்கள் ஏற்படும் எனவும் குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.

சட்டத்திருத்தத்ததை ஆளுநர் மீண்டும் ஏற்றுக்கொள்ளாமை மிகுந்த கவலையளிக்கின்றது. இதனையடுத்து, மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்ட கடிதம் புதன்கிழமை மாலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

Related Posts