திருட்டு விசிடி, நடிகைகளின் ஆபாசப் படங்கள் – விவாதிக்கிறது நடிகர் சங்க செயற்குழு

நடிகர் சங்க செயற்குழு இன்று கூடுகிறது. செயற்குழு கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ராதாரவி துணை தலைவர்கள் விஜயகுமார், காளை, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

nadigarsangam

இந்த கூட்டத்தில் தமிழ் சினிமாவுக்கு அச்சுறுத்தலாக உள்ள திருட்டு விசிடியை ஒழிப்பது குறித்தும், சமீபமாக நடிகைகளின் ஆபாசப் படங்கள் இணையத்தில் அதிக அளவில் வெளியாவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் சிம்பு, சத்யபிரியா, நளினி, சார்லி, சின்னஜெயந்த், ஸ்ரீகாந்த், குண்டு கல்யாணம், குயிலி, மனோ பாலா, சகுந்தலா, கே.ஆர்.செல்வராஜ், எம்.ராஜேந்திரன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.

Related Posts