திருட்டு குற்றச்சாட்டில் இலங்கை அகதிகள் ஐவர் கைது

திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. அங்கு தனியாருக்கு சொந்தமான வாகன உதிரி பாகங்கள் செய்யும் கம்பெனி செயல்பட்டு வருகிறது.

இந்த கம்பெனியில் 7 லட்சம் மதிப்புள்ள 225 கிலோ கிராம் நிறையுள்ள தாமர கம்பிகள் திருடப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ராபின்சன், ராம்குமார், சிவசீலன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்னளர்.

அவரிகளிடம் இருந்து கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது.

Related Posts