அளவெட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய நகைகளை, செய்த இடத்திலேயே விற்பனை செய்ய முயற்சித்த நபரை யாழ்ப்பாணத்தைச் நகைக்கடைக்காரர் பிடித்து திங்கட்கிழமை (12) தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
மல்லாகம், கல்லாரைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளவெட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் திருடியுள்ளார்.
திருடிய நகைகளை யாழ்ப்பாணத்திலுள்ள கடையொன்றில் குறைந்த விலைக்கு விற்க முற்பட்டுள்ளார். அந்த நபர் கொண்டு வந்த நகை தனது கடையில் தான் செய்யப்பட்ட நகையென்பதை அறிந்த உரிமையாளர், சந்தேகம் கொண்டு நகையைக் கொண்டு வந்தவரிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின்னான தகவல் வழங்கியுள்ளார்.
உடனடியாக அந்த நகையைக் கொள்வனவு செய்த உரிமையாளருக்கு அழைப்பை ஏற்படுத்திய நகைக்கடை உரிமையாளர், உங்கள் வீட்டில் நகை ஏதும் திருட்டுப் போயுள்ளதா? என விசாரித்துள்ளார்.
ஆம் என்று அவர்கள் கூறவே, நகையை விற்க வந்த நபரை மடக்கிப் பிடித்த நகைக்கடை உரிமையாளர், தெல்லிப்பழை பொலிஸாரை வரவழைத்து, சந்தேக நபரை ஒப்படைத்துள்ளார்.
இதேவேளை தெல்லிப்பழை துர்க்காபுரம் பகுதியிலுள்ள வீடொன்றின் கதவை திங்கட்கிழமை (12) உடைத்து உள்நுழைந்து நகை மற்றும் கமரா என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
3 பவுண் நகை மற்றும் கமரா என்பன திருடப்பட்டுள்ளன.
வீட்டில் இருந்தவர்கள் ஆலயத்துக்குச் சென்றிருந்த தருணம் இந்த திருட்டு நடைபெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.