சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆறு வீடுகளில் நேற்று முன்தினம் இரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி கல்வயல் பகுதியில் உள்ள பெருங்குளம் வேதனப் பிள்ளையார் கோவில் மற்றும் நுணாவில் வேலங்கேணி கந்தசுவாமி கோவில் ஆகிய பகுதிகளிலேயே இக் குழு திருட்டில் ஈடுபட்டுள்ளது.
இந் நிலையில் நுணாவில் வேலங்கேணி கந்தசுவாமி கோவில் பகுதியில் உள்ள வீட்டொன்றில் கதவுடைத்து திருடர்கள் உள் நுளைந்த அதிர்ச்சில் குறித்த வீட்டில் இருந்த வயோதிபப் பெண்ணிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து திருடவதற்காக வந்த திருடன் குறித்த வீட்டில் இருந்த சுடுதண்ணீர் போத்தலில் இருந்து சுடுதண்ணீர் வார்த்துக் கொடுத்து ஆசுவாசப்படுத்திவிட்டு பின் திருட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.