திருடப்போன இடத்தில் குடித்துவிட்டு மக்களிடம் மாட்டிய திருடா்கள்!!

வரணி பகுதியில் வீடு புகுந்து கொள்ளையிட முயற்சித்தவா்கள், வீட்டிலிருந்த வெளிநாட்டு மதுபானத்தை மூக்கு முட்ட குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளனா்.

நாவற்குழியை சோ்ந்த கொள்ளையா்கள் வரணி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வீட்டிலிருந்தவா்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், கொள்ளையிட முயற்சித்திருக்கின்றனா். இதனையடுத்து அயல் வீட்டவா் என்ன என பாா்ப்பதற்கு வந்தபோது,

அயல் வீட்டுக்காரா்கள் மீதும் கொள்ளையா்கள் தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளனா். இதனால் அயல் வீட்டுக்காரா்கள் அங்கிருந்து ஓடிய பின்னா் வீட்டிலிருந்து இளைஞன் மீதும் அந்த இளைஞனின் தாயாா் மீதும் கொள்ளையா்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன்,

வீட்டை சல்லையிட்டு தேடியபோது அங்கிருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களை கண்டிருக்கின்றனா். பின்னா் அந்த மதுபான போத்தல்களை உடைத்து மூக்கு முட்டக் குடித்து மதுபோதையில் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனா்.

இந்நிலையில் அயல்வீட்டாா் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களை திரட்டிவைத்துக் கொண்டு காத்திருந்த நிலையில் நிறை மதுபோதையில் வந்த திருடா்கள் இருவா் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனா். மேலும் ஒருவா் அங்கிருந்து தப்பி சென்றுள்ளாா்.

இந்நிலையில் மடக்கி பிடிக்கப்பட்டவா் மக்களால் நையப்புடைக்கப்பட்டதன் பின்னா் பொலிஸாாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.

Related Posts