கடந்த சனிக்கிழமை(04) திருட்டு போன சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
பருத்துறைய பகுதியில் வீட்டுக்குள் சனிக்கிழமை இரவு உள் நுழைந்த திருடர்கள் அலுமாரியில் இருந்து 35 பவுண் நகையினை திருடி சென்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் பருத்தித்துறை பொலிஸில் செய்த முறைப்பாட்டினை அடுத்து மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மோப்ப நாய் திருட்டு போன வீட்டில் இருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள வீடு ஒன்றில் போய் நின்றுள்ளது.
நாய் போய் நின்ற வீட்டு உரிமையாரை பொலிஸார் நேற்று முன்தினம் (05) சந்தேகத்தில் பொலிஸார், பொலிஸ் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு விட்டு விடுவித்திருந்தனர்.
இந்நிலையிர் நேற்றயதினம்(06) திருடப்பட்டதாக கூறப்படும் நகைகள் அணைத்து அதே அலுமாரியில் இருப்பதனை கண்ட வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
மீண்டும் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில் சந்தேகத்தில் விசாரணை மேற்கொண்ட வீட்டுக்கே நாய் மீண்டும் சென்றுள்ளது.
இதனை அடுத்து பொலிஸார் அவ் வீட்டு உரிமையாளரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.