திருடச் சென்ற வீட்டில் கெஞ்சிய திருடர்கள்: சாவகச்சேரியில் சம்பவம்

Theft_Plane_Sympol-robberyஎமக்கு தங்க நகை மற்றும் பணம் மட்டுமே வேண்டும். கொலை செய்யும் நோக்கம் இல்லை. ஒத்துழைப்புத் தாருங்கள். பொலிஸாருக்குச் சொல்ல வேண்டாமென திருடர்கள் கொள்ளையிடச் சென்ற வீட்டுக்காரரிடம் கெஞ்சிய சம்பவமொன்று சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் சாவகச்சேரி கற்குளி வீதியில் உள்ள வீடொன்றில் உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டுக்காரரின் கழுத்தில் கத்தியை வைத்து, மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளனர்.

வேலியை வெட்டிக்கொண்டு வளவுக்குள் புகுந்த கொள்ளையர் வீட்டுக்காரரை எழுப்பி கத்திமுனையில் ஓரிடத்தில் இருக்க வைத்து விட்டு வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த 10 ஆயிரம் ரூபா பணத்தையும் கையில் அணிந்திருந்த மோதிரத்தையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையிட வந்தவர்களில் ஐந்து பேர் சிங்களத்தில் பேசியுள்ளார். அதனை ஒருவர் தமிழில் மொழி பெயர்த்துக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளையர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து வீட்டார் அனைவரும் வீட்டில் முடங்கியிருந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Posts