திருச்சி சிறையில் இலங்கையர்கள் மூவர் உண்ணாவிரத போராட்டம்

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் மூன்று இலங்கை தமிழர்கள் இன்று ஆறாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அருளின்ப தேவன், குணசீலன், யோகரூபன் ஆகியோரே தமது விடுதலையை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

அகதிகள் முகாமில் குடும்பத்துடன் வசித்து வந்த தங்கள் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாக மூவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts