திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் தம்பதிகள் தற்கொலை முயற்சி

திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழர் தங்கவேலு மகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thankavelu-makesawan-wife-india-1

திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழர் தங்கவேலு மகேஸ்வரன் கடந்த மூன்று ஆண்டுகளாக அடைக்கபட்டு உள்ளார். இவரது கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் இவரை விடுதலை செய்ய பரிந்துரை செய்துள்ளது. ஆனால், சில காரணங்களை கூறி, அவரை விடுதலை செய்ய காவல்துறை மறுத்துவிட்டதாம்.

இந்த நிலையில், அவரது மனைவி திரசாந்தி, அவரது கணவர் தங்கவேலு மகேஸ்வரனை பார்க்க வந்துள்ளார். அப்போது, இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனையடுத்து, சுயநினைவு அற்ற நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் .

அவர்கள் இருவரும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

thankavelu-makesawan-wife-india-2

Related Posts