தமிழகம் – திருச்சியிலுள்ள சிறப்பு தடுப்பு முகாமில் ஈழ அகதிகள் நால்வர் இன்று புதன்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களை குடும்பத்தோடு சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரியே அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட வழக்கிலும், தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், பிணையில் இவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.
எனினும் சிறை வாசலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம் எனும் தடுப்பு முகாமில் குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தி கடந்த சில வருடங்களாக அடைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக தங்களை நம்பியிருக்கும் குடும்ப உறுப்பினர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஈழ அகதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளனர்.