திருச்சியில் இலங்கை தமிழ் பெண்ணை காணவில்லை

திருச்சியில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.திருச்சி வயலூர் ரோடு, சீனிவாசா நகர், ஏதென்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர் மனோகர். இவர் இலங்கை தமிழர். தற்போது கனடாவில் பணியாற்றி வருகிறார்.

திருச்சியில் இவரது மனைவி வளர்மதி, மகள் மனோசா (23) மற்றும் மகன்கள் வசித்து வருகின்றனர். மனோசா, ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளாக தாதி பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 25ம் திகதி மருத்துவமனைக்கு சென்ற மனோசா, பின்னர் வீடு திரும்பவில்லை. தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை.

இதையடுத்து தாய் வளர்மதி, அரசு மருத்துவமனை பொலிஸில் நேற்று முறைப்பாடு செய்தார். பொலிஸார் வழக்குப்பதிந்து மனோசாவை தேடி வருகின்றனர்.

Related Posts