திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் மீது இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு 11.00 மணி முதல் அடுத்த நாள் காலை 3.00 மணிக்குள் நடந்திருக்களாம் என சந்தேகிக்கப்டுகின்றது.
குறிப்பிட்ட 4.00 மணி நேரத்திற்குள் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டுள்ளது
இத்தீ வைப்பினால் வணக்கஸ்தலத்திற்கு உள்ளே இருக்கின்ற தரைவிரிப்புகள் தீயினால் கருகி உள்ளதை காணக்கூடியதாக இருந்ததுடன், இரண்டு மதுபான போத்தல்களும் அதற்குள் எரிபொருளும் காணக்கூடியதாக இருந்துள்ளது.