சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றின் ஊடாகவே விசாரணை நடாத்தப்படல் வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், எந்த வடிவிலானதொரு உள்ளக பொறிமுறை மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை என்பதனை வெளிப்படுத்தியும் இவற்றினை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையிலான கையெழுத்துப் போராட்டத்தினை சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஆரம்பமாகி இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன் முதற் கட்டமாக திருகோணமலை நகரில் சிவன்கோவில் முன்பாக எதிர்வரும் 07ம் திகதி (திங்கட்கிழமை) பி.ப 3.00 மணிக்கு கையெழுத்துப் போராட்டம் ஆரம்பமாகும். இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட முன்னைனாள் போராயர் வணக்கத்திற்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களும் கலந்து கொள்ளுவார்.
- Friday
- January 17th, 2025