திருகோணமலையில் ஆயுதங்களுடன் அறுவர் கைது!

திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பலதரப்பட்ட ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருகோணமலை தலைமையக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் வாள்கள், துப்பாக்கி ரவைகள் உட்பட பலதரப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இதுவரை அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜமாலியா மற்றும் மட்கோ ஆகிய பகுதிகளிலேயே அதிகளவான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts