திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் சடலங்கள் மிதப்பதாக வெளியான தகவல்களை அடுத்து இலங்கை கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
திருகோணமலையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் 6 சடலங்கள் மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்திருந்தனர். தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து விடயம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கடற்படை படகுகள் தேடுதலுக்கு அனுப்பப்பட்டன.
தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அளவி தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு 12 மணி வரை தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்தவொரு சடலமும் கண்டெடுக்கப்படவில்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இன்றைய தினமும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அளவி கூறினார்.
இதேவேளை, திருகோணமலை – நிலாவெளி கடற்பரப்பில் நேற்று மாலை ஆண்ணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தது.
இந்த சடலத்திற்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட அடையாளஅட்டையின் பிரகாரம், குறித்த நபர் சென்னையில் பணிபுரியும் சாரதி என சந்தேகம் எழும்பியுள்ளது.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் குறிப்பிட்டனர்.