திரிஷா படத்தில் ஹாரிபாட்டர் கிராபிக்ஸ் டீம்!

சுந்தர்.சியின் அரண்மனை-2 படத்தில் முதன்முதலாக பேய் வேடத்தில் நடித்த த்ரிஷாவுக்கு தற்போது படத்துக்குப்படம் பேய் பிடிக்கத் தொடங்கி விட்டது. அதன்பிறகு நாயகி படத்தில் பேயாக நடித்துள்ள அவர், தற்போது சாக்லேட் மாதேஷ் இயக்கும் மோனிகா படத்தில் அதிரடி பேயாக நடிக்கிறார். அதோடு, முதல் இரண்டு படங்களில் இந்திய பேயாக நடித்த அவர் இந்த படத்தில் லண்டன் பேயாக நடிக்கிறார்.

trisha

தற்போதைய நிலவரப்படி திரிஷாவின் மார்க்கெட் திருப்திகரமாக உள்ளதால். இந்த மோனிகா படத்தை லண்டனில் நடக்கும் கதையில் சித்தரித்திருப்ப வர்கள், அங்கேயே முகாமிட்டு படப்பிடிப்பும் நடத்துகிறார்கள். திரிஷாவை நம்பியே முழுக்க முழுக்க இந்த படத்தை மெகா பட்ஜெட்டில் இயக்குகிறார் மாதேஷ். அதேசமயம், இந்த படத்தில் சுந்தர்.சி படங்கள் பாணியில் காமெடி காட்சிகளும் அதிகமாக உள்ளதாம். அதனால் யோகிபாபு, மதுமிதா உள்ளிட்ட காமெடியன் களும் இப்படத்தில் உள்ளனர்.

அதோடு, திரிஷாவை பயங்கரமான பேயாக காட்டப்போகும் மாதேஷ், லண்டனிலேயே கிராபிக்ஸ் காட்சிகளை ரெடி பண்ணுகிறாராம். ஹாரிபாட்டர் ஹாலிவுட் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கிய டீம் இந்த படத்தில் அதிரடியான திரிஷா பேயை உருவாக்குகிறார்களாம்.

Related Posts