திரிஷாவுக்கு மேக்கப் போட்டுவிட்ட கமல்!

நடிகை திரிஷா, இன்று தனது டிவிட்டரில் ஒரு சூப்பர் படத்தைப் போட்டுள்ளார். எத்தனை பேருக்கு இந்த “பாக்கியம்” கிடைத்ததோ நமக்குத் தெரியாது.. ஆனால் திரிஷா தனக்குக் கிடைத்த பாக்கியத்தை ஊரைக் கூட்டி உலகைக் கூட்டி அறிவித்துள்ளார் இந்தப் படத்தின் மூலம்.

kamal-trisha

அதாவது கமல்ஹாசன், திரிஷாவுக்கு மேக்கப் போடும் படம்தான அது.

ஒரு தொழில்முறைக் கலைஞர் போல அவ்வளவு அக்கறையாக மேக்கப் போடுகிறார் திரிஷா. ஆனால் திரிஷாவோ படு ஜாலியாக கேமராவுக்குப் போஸ் கொடுத்தபடி குதூலகச் சிரிப்புடன் அமர்ந்திருக்கிறார்.

திரிஷாவின் முகத்தில் தெரிந்தது வெறும் சிரிப்பு மட்டுமல்ல பெருமிதம் கலந்த பூரிப்பும் கூட என்பதைச் சொல்கிறது அவரது டிவிட். அதில், எனக்கு யார் இன்று மேக்கப் போட்டு விட்டது என்று யூகியுங்கள் பார்க்கலாம்.. மாஜிக் ஹேன்ட்ஸ் என்று ஹேஷ்டேக் போட்டு குதூகலித்துள்ளார் திரிஷா.

கமல்ஹாசனின் தூங்காவனம் படத்தில் திரிஷா அவருடன் நடிக்கிறார் என்பது நினைவிருக்கலாம். ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts